பழனியில் வேகமாக நிரம்பும் அணைகள்
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பாலாறு - பொருந்தலாறு, வரதமாநதி, குதிரையாறு அணைகள் உள்ளன. சில நாட்களாக கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழையால், அணைகளுக்கு அதிக நீர்வரத்து ஏற்பட்டது. இதில் வரதமாநதி அணை, குதிரையாறு அணையில் நிரம்பி உபரி நீர் வெளியேறுகிறது. மேலும், பாலாறு பொருந்தலாறு அணையில் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.