திண்டுக்கல்: சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் மாநாடு
குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7850 வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து சத்துணசுவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க முதல் மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு. திண்டுக்கல்லில் இச்சங்கத்தின் மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு மணிக்காளை தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் பி. அய்யங்காளை, பொதுச்செயலாளர் இராமமூர்த்தி, மாவட்டத்தலைவர் எஸ். எம். ஜெயசீலன், ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அரசு ஊழியர் சங்க தலைவர்கள் முபாரக்அலி, சுகந்தி, தோழமைச்சங்க நிர்வாகிகள் டி. ராஜமாணிக்கம், பத்மா, ஜெசி, எம். எல். கேசவன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்டத்தலைவராக டி. பழனிச்சாமி, செயலாளராக வி. மணிக்காளை, பொருளாளராக பி. சாரதா மற்றும் நிர்வாகிகளாக இளங்கோ, சின்னம்மாள், சித்திரக்கலை, துரைராஜ், சுப்புராம், அருணாதேவி, மற்றும் தணிக்கையாளர்களாக ஜே. எஸ். விஜயகுமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் ஓய்வூதியத்தோடு, அகவிலைப்படி, இலவச மருத்துவக் காப்பீடு, குடும்ப பாதுகாப்பு ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.