திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் முன்னிலையில் வங்கியாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்திற்கு 2024-25-ஆம் ஆண்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட வருடாந்திர கடன் இலக்கில் முன்னுரிமை கடன் ரூ. 18, 971. 84 கோடியில் ரூ. 4, 923. 74 கோடியும், வேளாண்மை கடன் இலக்கு ரூ. 15, 466. 78 கோடியில் ரூ. 3, 538. 40 கோடியும், சிறு, குறு தொழில் மேம்பாட்டுக் கடன் இலக்கு ரூ. 3, 137. 90 கோடியில் ரூ. 1, 336. 93 கோடியும், பயிர்க்கடன் இலக்கு ரூ. 10, 689. 84 கோடியில் ரூ. 2, 358. 00 கோடியும், விவசாய பருவகால கடன் இலக்கு ரூ. 3, 007. 76 கோடியில் ரூ. 862. 87 கோடியும், குறு நிறுவனங்களுக்கான கடன் இலக்கு ரூ. 1, 890. 70 கோடியில் ரூ. 629. 25 கோடியும், கல்விக்கடன் இலக்கு ரூ. 31. 81 கோடியில் ரூ. 7. 16 கோடியும், வீட்டுக்கடன் இலக்கு ரூ. 154. 66 கோடியில் ரூ. 22. 11 கோடியும் என்ற வகையில் 30. 06. 2024 வரை கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் சதீஷ்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருணாச்சலம், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் கமலக்கண்ணன், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்(தாட்கோ) மாவட்ட மேலாளர் முகைதீன் அப்துல்காதர், அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.