ஆத்தூர்: தாமரைக்குளம் கண்மாய் கரை சீரமைப்பு
நெல்லுார் தாமரைக்குளம் கண்மாய் கரை மண் அரிப்பு பகுதி சீரமைக்கப்பட்டது. நெல்லுார் தாமரைக் குளம் கண்மாய் கரையில் கனமழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு பெரும்பள்ளம் உருவானது. கண்மாய் முழுவதும் நிறைந்த நிலையில் கரையில் உடைப்பு ஏற்படுமோக என விவசாயிகள் அதிர்ச்சியில் இருந்தனர். பொதுப்பணித்துறைக்கு தகவல் தெரிவிக்க நேற்று முன்தினமே கண்மாய்க்கு செல்லும் அணை தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் செல்வம் தலைமையில் உதவி பொறியாளர் கண்ணன், பணியாளர்கள் மணல் மூடைகளை மண் அரிப்பு பகுதியில் அடுக்கி கூடுதல் மண்ணை கொட்டி கரையை பலப்படுத்தினர்.