பல வீடுகளில் தற்போது வெஸ்டர்ன் கழிப்பறை முறை தான் உடல் கழிவுகளை வெளியேற்ற பயன்படுத்தப்படுகிறது. அதே நேரம் இந்திய கழிப்பறை தான் ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்கிறார்கள் மருத்துவர்கள். இந்தியக் கழிப்பறையில் அமரும் போது கால் மூட்டுகள் வளைந்து, பிட்டத்தை பாதத்துக்கு அருகில் இருக்கும்படி வைக்கிறோம், மேல் உடம்பை வளைத்து குத்தவைத்து உட்காரும் நிலை உடலுக்கு பயிற்சியாக அமைவதோடு குடலுக்கும் நல்லது.