ஹரியானா, ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் தொடங்கியது. காஷ்மீரில் செப்., 18, 25, அக்., 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றன. இந்த தேர்தலில் 63.88% வாக்குகள் பதிவாகியிருந்தது. அதே போல் ஹரியானாவில் அக்., 5ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அங்கு 65.65% வாக்குகள் பதிவாகியிருந்தது. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீரில் நடைபெற்ற முதல் தேர்தல் இதுவாகும்.