குழந்தையைப் மீட்டு தர கோரி மகளிர் காவல் நிலையம் முன்பு தர்ணா

83பார்த்தது
திண்டுக்கல் மாநகராட்சி மேட்டுப்பட்டி பகுதியில் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 32). இவர் பூட்டு தொழில் செய்து வருகிறார். மேட்டுப்பட்டி குட்டை குளம் பகுதியைச் சேர்ந்த சகாய கரோலின் இருவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆகி ஒரு வருடத்திற்குள்ளாகவே கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு காரணமாக சகாய கரோலின் தனது தாய் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார். கணினி பட்டதாரியான அவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்து வருகிறார். உண்மையில் கலந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கணவர் மற்றும் உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் பிரபாகரன் தனது மூன்று வயது மகளுடன் திண்டுக்கல்லில் வீட்டில் இருந்துள்ளார். கடந்த 20 நாட்களாக குழந்தை பேச விடாமல் பிரபாகரன் தடுத்து வந்ததாகவும், தனது பேச்சை மட்டும் கேட்குமாறு குழந்தையை அடித்து துன்புறுத்துவதாகவும், குழந்தையை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க கோரி திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சகாய கரோலின் புகார் அளித்தார்.
பிரபாகரன் தன் மகளை தர மாட்டேன் என்று விசாரணையின் போது கூறியதால் சகாய கரோலினின் உறவினர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு தரையில அமர்ந்து முற்றுகையிட்டு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி