திண்டுக்கல் : காங்கிரசார் எஸ்பியிடம் புகார் மனு

53பார்த்தது
இந்திய தேசிய காங்கிரஸின் தேசிய பொதுச் செயலாளரும் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மேற்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார், திண்டுக்கல் மாவட்ட மாநகர காங்கிரஸ் தலைவர் மணிகண்டன், மற்றும் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் மச்சக்காளை உள்ளிட்டோர் தலைமையில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப்பிடம் புகார் மனுவை அளித்தனர்.

இந்த புகார் மனுவில் பாஜக தமிழ்நாடு பொறுப்பு குழு தலைவர் எச். ராஜா ராகுல் காந்தியை தேசவிரோதி என்று கூறியிருந்தார். அதற்காகவும், பாஜக தலைவர் தர்வீந்தர் சிங் மார்வா கடந்த 11. 9. 2024 அன்று ஒரு பாஜக நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு வெளிப்படையாகவே கொலை மிரட்டல் விடுத்தார், அதில் அவர் "ராகுல் காந்தியே நிறுத்துங்கள் இல்லையெனில் எதிர்காலத்தில் உங்கள் பாட்டிக்கு ஏற்பட்ட கதியை நீங்களும் சந்திக்க நேரிடும்" என்று கூறியுள்ளார். இதற்காக இவர்கள் ஐந்து பேர் மீதும் பி என் எஸ் (BNS) 2023 தொடர்புடைய 351, 352, 353, 61 விதிகளின் கீழ் உடனடியாக எஃப் ஐ ஆர் (FIR) பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி திண்டுக்கல் மாவட்ட காங்கிரசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனுவை அளித்துள்ளனர். இதில் இளைஞர் காங்கிரஸ், மகிளா காங்கிரஸ் என ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி