முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

51பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சின்னாளபட்டி பகுதியில் அண்ணா அவர்களின் 116வது பிறந்தநாள் விழா‌ அதிமுக சார்பில் கிழக்கு ஒன்றிய செயலாளர் மயில்சாமி தலைமையில் நடைபெற்றது இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும். கழக துணை பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன் கலந்து கொண்டு சிற்புறை ஆற்றினர் அப்போது பேசிய அவர் கடந்த மூன்று வருடங்களாக
வெளிநாடு சென்று முதலீடு ஈட்டு வந்துள்ளதாக கூறும் முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மூல தனம் எல்லா ஆட்சியிலும் எல்லா மாநிலங்களிலும் கொண்டு வருவார்கள் அது பழக்கம் தான் ஆனால் ஸ்டாலின் புதுசாக கொண்டு வருவது போன்றும் அதிலும் ஒரு உண்மை இல்லை ஒளிவு மற்ற தன்மை இல்லை. எவ்வளவு பேருக்கு வேலை கிடைத்துள்ளது இந்த விபரத்தை நாங்கள் வெள்ளை அறிக்கையாக விட வேண்டும் என்று கேட்கிறோம்
இப்படிப்பட்ட மோசமான ஆட்சி என பேசினார். இந்த நிகழ்ச்சியில் கழக அம்மா பேரவை துணை செயலாளர் நத்தம் ஒன்றிய பெருந்தலைவர் கண்ணன். ஒன்றிய செயலாளர்கள். சின்னசாமி. சுப்பிரமணியம். ஆரோக்கிய சாமி. மாநில செயற்குழு உறுப்பினர் சுகன். மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி