மலைக்கிழங்குகளை விற்பனை செய்வதற்கு விற்பனை மையம் வேண்டும்

52பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானல் மக்களின் முக்கிய வாழ்வாதாரம் விவசாயம்.

கொடைக்கானலில் வெள்ளைப் பூண்டு, கேரட், நூக்கல், முட்டை கோஸ், உருளைக்கிழங்கு, பட்டாணி, பீன்ஸ், போன்ற காய்கறிகள் விளைச்சல் செய்யப்பட்டு மதுரை திருச்சி திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளுக்கு கொடைக்கானலில் இருந்து வாகனங்கள் மூலமாக அனுப்பப்பட்டு வருகின்றார்கள்.

வெளியூர்களில் விற்பனை மையத்தில் விளைச்சல் செய்த காய்கறிகளை விற்பனைக்கு குடுக்கும் பொழுது இவர்களுக்கு மிகக் குறைந்த விளக்கே எடுக்கப்படுகிறது எனக் கூறுகிறார்கள்.


கொடைக்கானலில் இருந்து விளைச்சல் செய்த காய்கறிகளை எடுத்துச் செல்லும் கனரக வாகனங்களும் அதிக வாடகை வாங்குவதால் என்ன செய்வது என்று அறியாமல் இருக்கும் விவசாயிகள்

காய்கறி சந்தையில் இன்றைக்கு விற்கப்படும் உருளைக்கிழங்கின் விலை 60 முதல் 70 வரை கிலோ விற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் விவசாயிகளிடம் கொள்முதல் வாங்கும் இடத்தில் 25 முதல் 30 ரூபாய்க்கு வாங்கப்படுகிறார்கள் என்று வருத்தம் தெரிவிக்கின்றனர்.


இந்தியா ஒரு விவசாய நாடாக இருப்பதால் தமிழக அரசு இதை கவனத்தில் கொண்டு கொடைக்கானலில் கொள்முதல் செய்யும் அளவிற்கு கொண்டு வந்தால் நல்லது என்று கொடைக்கானல் வாழ் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி