ஹரியானா சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று (அக். 8) காலை 8 மணிக்குத் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடங்கி அரை மணி நேரம் ஆகி உள்ள நிலையில் மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவையான 46 இடங்களை விட அதிக இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.