ஆத்தூர் - Athoor

திண்டுக்கல்: குட்கா விற்பனை செய்த 3 கடைகளுக்கு சீல்

திண்டுக்கல்: குட்கா விற்பனை செய்த 3 கடைகளுக்கு சீல்

திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட அலுவலர் கலைவாணி உத்தரவின் பேரில் அலுவலர்கள் செல்வம், ஜோதிமணி, சரவணக்குமார் உள்ளிட்டோர் திண்டுக்கல் நகர், குட்டியப்பட்டி, ஆத்துார் உள்ளிட்ட பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். மேலும் கடைகளில் பொருட்கள் வாங்குவது போல் மாறுவேடத்தில் சென்ற உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குட்கா பொருட்களை கேட்டுள்ளனர். கடைக்காரரும் அதிகாரிகள் என தெரியாமல் எடுத்து கொடுத்தபோது சிக்கினார். கடைக்குள் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்ததோடு 3 கடைகளுக்கு சீல் வைத்தனர். மேலும் ரூ. 3 லட்சம் அபராதம் விதித்தனர்.

வீடியோஸ்


భద్రాద్రి కొత్తగూడెం జిల్లా