திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள மல்லனம்பட்டியை சேர்ந்தவர் ராமு (வயது 45). A கூலித்தொழிலாளி. இவரது மனைவி சசிகலா (40). இவர்களுக்கு தேவா (18) என்ற மகனும், ரித்திகா (16) என்ற மகளும் உள்ளனர். நேற்று இரவு குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். திண்ணையில் ராமு படுத்திருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டின் சுவர் இடிந்து உள்புறமாக விழுந்தது. இதில் சசிகலா மற்றும் அவரது மகன் தேவா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வத்தலக்குண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.