சென்னையில் இருந்து தேனிக்கு தனியார் ஆம்னி பேருந்து நேற்று இரவு கிளம்பி வந்து கொண்டிருந்தது. பேருந்தை டிரைவர் பரணி குமார் ஓட்டி வந்தார். இந்நிலையில் பேருந்து இன்று 14. 10. 24 காலை திண்டுக்கல் அருகே உள்ள வக்கம்பட்டியில் அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே மரம் ஏற்றிக்கொண்டு வேகமாக வந்து கொண்டிருந்தது லாரியை ஆத்தூரைச் சேர்ந்த பக்ரூதீன் ஓட்டி வந்தார். வேகமாக வந்த லாரி ஆம்னி பேருந்து மீது மோதியது இதில் லாரியில் வந்த மெக்கானிக் கணபதி வயது 65 சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிர் இழந்தார். பேருந்தில் பயணம் செய்த பயணிகள் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு வரப்பட்டனர். அங்கு பேருந்து ஓட்டுனர் பரணி, லாரி ஓட்டுநர் பக்ரூதீன், பயணிகள் ரவிச்சந்திரன், கலைமதி, பிரகாஷ் ஆகிய 5 அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பேருந்தில் பயணம் செய்த மேலும் ஒரு சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் திரும்பினார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.