தர்மத்துப்பட்டி பகுதியில் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்

58பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தர்மத்துப்பட்டி. இப்பகுதியில் இந்திரா காலனியில் அருந்ததிய மக்கள் சுமார் 2000 குடும்பங்கள் வசித்து வருவதாக கூறப்படுகிறது இவர்களுக்கு தனியாக மயானம் உள்ளது.

இப்பகுதியில் உள்ள அருந்ததிய மக்கள் இறந்தால் இவர்களுக்காக ஒதுக்கப்பட்ட மயானத்தில் கொண்டு சென்று அடக்கம் செய்வது வழக்கம் சில வருடங்களாக தனி நபர் ஒருவர் மயானத்துக்குச் செல்லும் பாதையை அடைத்து உயிரிழந்தவர்கள் உடலை கொண்டு செல்ல விடாமல் தடுத்து வருவதாக வட்டாட்சியர், ஆதிதிராவிடர் நலத்துறை, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர் எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்காமல் அப்படியே விட்டு விட்டதால் இதே பகுதியைச் சேர்ந்த பழனியம்மாள் என்ற பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது உடலை அடக்கம் செய்வதற்கு மயானத்துக்கு அருந்ததிய மக்கள் கொண்டு சென்ற பொழுது பொதுப் பாதையை ஆக்கிரமிப்பு செய்தவர் வழி விடாதால் உடலை அங்கேயே வைத்து விட்டு வந்து தர்மத்துப்பட்டி வழியாக மதுரையில் இருந்து பழனி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டதால் சாலையில் இரு பகுதிகளிலும் நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றது. போக்குவரத்து பாதிப்படைந்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி