ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சீவல் சரகு ஊராட்சியில் ரூபாய் 75 கோடி மதிப்பில் கூட்டுறவுத்துறை சார்பாக ஆத்தூர் கூட்டுறவு மற்றும் கலை அறிவியல் கல்லூரி கட்டப்பட்டு வருகிறது
கட்டிட பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துவிட்டன கடந்த இரண்டு நாட்களாக திண்டுக்கல் மாவட்டத்தில் ஆய்வுகளை மேற்கொண்ட பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ. வ. வேலு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ. பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர். அர. சக்கரபாணி ஆகியோருடன் ஆய்வு மேற்கொண்டார் அரசு கூடுதல் தலைமைச் செயலர். மங்கத்ராம் சர்மா, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு செயலர் செல்வராஜ், மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி, பழனி சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினர் ஐபி செந்தில் குமார், திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் ஆகியோர் முன்னிலைவகித்தனர்
கல்லூரியில் ஆய்வு செய்த
அமைச்சர் எ. வ. வேலு அவர்கள் அவர்கட்டிடம் முன்பகுதி குறித்து கேட்டறிந்தார் அதன் பின்னர் மாணவர்கள் படிக்கும் வகுப்பறை மற்றும் இதர அறைகளுக்கு சென்று பார்வையிட்ட அவர் கட்டிடம் சிறப்பாக கட்டப்பட்டுள்ளது என்று பாராட்டினார்.