திண்டுக்கல் அருகே உள்ள அனுமந்தராயன் கோட்டையில் தடுப்பனை கட்டப்பட்டுள்ளது. குடகனாற்றில் கடந்த சில நாட்களாக தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் அனுமந்தராயன் கோட்டையில் உள்ள தடுப்பணையில் அருவி போல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தீபாவளி முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் திண்டுக்கல், மதுரை, தேனி உட்பட பல ஊர்களில் இருந்து
ஏராளமான பொதுமக்கள் குளிப்பதற்காக குடும்பத்துடன் வருகை தந்து ஆனந்தமாக குளித்து நீராடி மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்.
தற்பொழுது அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் தடுப்பணைக்கு வருவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பாக நின்று குளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மேலும் தடுப்பணியில் பல வண்ண கலர்களை கொண்டு வண்ணம் பூசப்பட்டு உள்ளது அதன்மேல் தண்ணீர் விழுந்து செல்லும் பொழுதுபார்ப்பதற்கு ரம்யமாக உள்ளது. மேலும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவதால் தடுப்பணை அருகே தற்காலிக கடைகள் முளைத்துள்ளன.
இதனால் தற்பொழுது நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வந்து குளித்து செல்கின்றனர். எனவே திண்டுக்கல் குற்றாலம் தற்பொழுது திடீர் சுற்றுலா தளமாக மாறி உள்ளது.