உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொண்டையில் சாக்லேட் சிக்கியதால் 4 வயது சிறுவன் 3 மணி நேரமாக மூச்சுத் திணறி துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாக்லேட் சிக்கியதை அறிந்த தாய், அவருக்கு தண்ணீர் கொடுத்தபோது அது கீழே இறங்கி மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. பல மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றபோதும் மருத்துவர்கள் தீபாவளி விடுமுறையில் இருந்ததால் மகனை காப்பாற்ற முடியாமல் போனதாக பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.