வத்தலக்குண்டு: 30 கிலோ கருங்காலி கட்டைகள் பறிமுதல்

79பார்த்தது
வத்தலக்குண்டு காந்திநகரில் உள்ள பிரபல ஹோட்டல் உரிமையாளர் சந்திரனின் பங்களாவில் பதுக்கி வைத்திருந்த கருங்காலி கட்டைகளை விலை பேச இன்று அதிகாலை வந்துள்ளனர்.

அப்போது பங்களாவை சுற்றி வளைத்த வனத்துறையினர், அங்கு விற்பனைக்காக வைத்திருந்த ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான கருங்காலி கட்டைகள் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்களை பறிமுதல் செய்தனர், அப்போது தப்பியோட முயன்ற போடியைச் சேர்ந்த யோகேஷ் மற்றும் சந்திரனின் டிரைவர் சிவா ஆகிய இருவரையும் போடி வனத்துறையினர் சுற்றி வலைத்து பிடித்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர், மேலும் அதே பங்களாவில் மிகவும் பழமையான கோவில் கலசங்களையும் வனத்துறை பறக்கும் படையினர் கைப்பற்றியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்களின் எல்லையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் வத்தலக்குண்டில் தனியார் ஹோட்டல் உரிமையாளரின் பங்களாவில் பதுக்கி வைத்திருந்த ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ளான கருங்காலி கட்டைகள் மற்றும் கோவில் கலசங்களை வனத்துறையினர் கைப்பற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் போடி பகுதியை சேர்ந்த நபர்களோடு சேர்த்து தேனி மாவட்ட வனத்துறையினர் ஐந்து பேரை கைது செய்துள்ளதாக தகவல்.

தொடர்புடைய செய்தி