ஆத்தூர்: புளிய மரங்களை வெட்டி கடத்திய நபர்கள்

70பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அகரம் பேரூராட்சியில் உள்ள கோட்டூர் ஆவரம்பட்டி பகுதியில் இருந்து பாப்பனம்பட்டி செல்லும் சாலையின் ஓரங்களில் உள்ள அரசுக்கு சொந்தமான ஏழுக்கும் மேற்பட்ட புளிய மரங்களை அப்பகுதி கவுன்சிலர் கமலக்கண்ணன் ஆதரவோடு நன்கு பூ, பிஞ்சு, காய்களோடு இருக்கக்கூடிய நிலையில் புளிய மரங்களை வெட்டி கடத்த முயன்றனர். பல லட்சம் மதிப்பிலான புளிய மரங்கள் வெட்டி கடத்த முயன்றது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் படம் பிடிப்பதை கண்டதும் மரம் வெட்டும் கும்பல் அரிவாள் மற்றும் கட்டிங் மெஷின் ஆகியவற்றை மரம் கடத்தலுக்கு பயன்படுதிய வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பியோட்டம். இதுபோன்று அரசுக்கு சொந்தமான இயற்கை வளங்களை கடத்தி வரும் கும்பல் மீது மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி