ஆத்தூர்: அரை நிர்ணத்துடன் பொதுமக்கள் ஆட்சியரிடம் புகார் மனு

83பார்த்தது
கன்னிவாடி அருகே உள்ள கரிசல்பட்டியை சேர்ந்த ஜேம்ஸ் ஜெயராஜ் இவர் தற்பொழுது தேனி மாவட்ட நக்சலைட் பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் கோவிலுக்கு சொந்தமான நிலம் அருகே புதிதாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு நிலம் விலைக்கு வாங்கி உள்ளார். மேலும் இவர் கோவிலுக்கு செல்லும் பொதுபாதையை ஆக்கிரமிப்பு செய்து வேலி அமைத்து அபகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கோவிலுக்கு சொந்தமான 80 செண்ட் நிலத்தில் உள்ள தேக்கு உட்பட பல வகையான விலை உயர்ந்த ஜாதி மரங்களை வெட்டி கடத்தியும், மணல் கடத்தியும் வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கன்னிவாடி காவல் நிலையம், வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் என அரசு அதிகாரிகளிடம் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கோவில் பூசாரி தளவாய் பலமுறை புகார் மனு அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கோவில் பூசாரி தாளவாய் ஜெகதீசன் ஆகியோர் அரை நிர்வாணமாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து ஆக்கரமிப்பு நிலத்தை மீட்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். பின்னர் தங்களது கோரிக்கைகளை முறையாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் காவல்துறையையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி