திண்டுக்கல்லில் அனைத்து மக்களின் உரிமைக்கான இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றி தந்த அண்ணல் அம்பேத்கர் சிலையை நிறுவக் கோரி சமூக நீதிக்கான கூட்டமைப்பு அகில இந்திய மருதநாயகம் மக்கள் கட்சி தாயக மக்கள் கட்சி இந்திய சோசியலிஸ்ட் கட்சி இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் அகில இந்திய மருதநாயகம் மக்கள் கட்சி தலைவர் தமீம் அன்சாரி தலைமை தாங்கினார். இந்தியா சோசியலிஸ்ட் கட்சி தலைவர் மரிய திவாகரன் அகில இந்திய மருதநாயகம் மக்கள் கட்சி மாவட்ட தலைவர் மைதீன் பாட்ஷா, தாயக மக்கள் கட்சி மண்டல செயலாளர் இப்ராஹிம், அகில இந்திய மருதநாயகம் மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் மரிய ஜெரால்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் பாண்டியன் தாயக மக்கள் கட்சி தலைவர் தமிழ்ச்செல்வன் இளைஞர் தொழிலாளர் பணி பிலிப் சுதாகர் சம நீதி புரட்சி புலிகள் கட்சி தலைவர் எழிலரசி இளங்கீரன் கோரிக்கை விளக்க உரையாற்றினர். மேலும் சமூக நீதிக்கான கூட்டமைப்பு சார்பில் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.