திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சென்னமநாயக்கன்பட்டியில் சொந்த வீடு கட்டி வசித்து வருபவர் முத்துகிருஷ்ணன் வயது 65. பந்தல் டெக்கரேஷன் வேலை செய்து வருகிறார். திடீரென இவரது வீட்டிற்குள் நான்கடி நீளம் உள்ள கட்டு விரியன் பாம்பு புகுந்தது. இதனைப் பார்த்த முத்துகிருஷ்ணன் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். பின்பு அருகில் உள்ள இளைஞர் உதவியுடன் பாம்பை வீட்டை விட்டு வெளியே விரட்டி விட்டனர். பாம்பு அருகில் உள்ள காட்டுப்பகுதிக்குள் சென்று மறைந்தது.