திருச்சி சரக டிஐஜி வருண் குமார் தொடர்ந்த வழக்கில், நாலை காலை 10:30 மணிக்கு திருச்சி ஜே.எம்.4 நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக சீமானுக்கு நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. சீமான் நாளை (ஏப்ரல் 8) நேரில் ஆஜராகவில்லை என்றால் பிடிவாண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி விஜயா தெரிவித்துள்ளார். ஏற்கெனவே இன்று (ஏப்ரல்.7) மாலை 5 மணிக்குள் ஆஜராகாவிடில் பிடிவாரண்ட் என நீதிமன்றம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.