உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், ராம நவமியை முன்னிட்டு சிலர் காவி கொடிகளுடன், தர்கா மீது ஏறியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலர், காவி கொடிகளை ஏந்தியவாறு தர்கா மீது ஏறி அட்டகாசம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவர்கள், சையத் சலார் காஜி தர்காவில் ஏறி, ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என கோஷமிட்டுள்ளனர். இதனால் பதறிப்போன போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று அவர்களை மசூதியிலிருந்து அப்புறப்படுத்தினர்.