அரியலூர்: மருதூர் பகுதியைச் சேர்ந்த கிருபாகரன் - அபிநயா தம்பதி, தங்களின் வளைகாப்பு விழாவிற்கு வந்த விருந்தினர்களுக்கு பரிசாக தர்பூசணியை வழங்கி உள்ளனர். தர்பூசணி பழங்களில் ரசாயனம் கலந்து விற்கப்படுகிறது என தகவல் பரவி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளை ஆதரிக்க இவ்வாறு செய்ததாக கூறிய அபிநயா, அந்தந்த காலங்களில் விளையும் விவசாய பொருட்களை மற்றவர்களும் பரிசாக வழங்கி விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.