தெலங்கானா மாநிலம் கொண்டாபூர் அருகே கணவர் முகமது பஸ்ரத், தனது கர்ப்பிணி மனைவியை சிமென்ட் செங்கலால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2023 ஆம் ஆண்டு முகமது பஸ்ரத் (32), தனது மனைவி ஷபானா பர்வீனை (22) காதல் திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து இவர்களுக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அந்த வகையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த கணவர், மனைவி மீது கல்லைப் போட்டு தாக்கியுள்ளார். காயமடைந்த மனைவி மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார்.