ஆண்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் டி.அருள்துமிலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் கள்ளக்காதல் கொலைகள் அதிகரித்து வருகின்றன. கள்ளக்காதலில் ஈடுபடும் ஆண், பெண் ஆகியோருக்கு சமமான தண்டனை கிடைக்கும் வகையில் சட்டம் இயற்றுங்கள். ஆண்களை தற்கொலைக்குத் தூண்டும் மனைவிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த கோரிக்கைகளை முதல்வர் பரிசீலித்து ஆண்களை பாதுகாக்க வேண்டும்” என்றார்.