பிரபல நடிகை கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம் என்ற செய்தி அண்மைக் காலமாக தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில் அது யாருடன் என்பதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது. அதன்படி தன்னுடைய 15 ஆண்டுகால நண்பரான ’ஆண்டனி தட்டில்’ என்பவரை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவருக்கும் கோவாவில் டிசம்பர் 11ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.