திருச்சியை சேர்ந்த மனோகர் (43) ஆட்டோ ஓட்டி வந்தார். இவர் கடந்த சனிக்கிழமை (நவ. 16) அன்று சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்த போலீஸ் விசாரணையில், மனோகருக்கு பள்ளி தோழியான சுதா (35) என்பவருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. சுதாவுக்கு கொடுத்த பணத்தை மனோகர் திருப்பி கேட்ட போது அவர் மோசமாக திட்டியதால் மனமுடைந்த மனோகர் தற்கொலை செய்தது தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக சுதா உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.