பெண்ணுக்கு கத்திக்குத்து: இருவர் கைது

72பார்த்தது
பெண்ணுக்கு கத்திக்குத்து: இருவர் கைது
மதுரை: எம்.புதுப்பட்டியைச் சேர்ந்த அபினேஷ் (24) முத்து என்பவரது மகளை காதலித்து திருமணம் செய்ததால், இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் (நவ., 17) இரவு இருதரப்பினரும் ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர். இதில் அபினேஷின் தாய் வளர்மதி கத்தியால் குத்தப்பட்டு, படுகாயமடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காடுபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணின் தந்தை உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, இருவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி