திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த நாதக சீமான், “அதிமுகவினர் தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்தும் அமலாக்கத்துறை திமுகவினரை கண்டு கொள்ளாதது ஏன்?. பாஜகவிற்கு திமுக முறையாக கப்பம் கட்டிவிடுவதால் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தவில்லை. திமுகவும் - பாஜகவும் மறைமுகமாக இல்லை, வெளிப்படையாகவே நெருக்கமாக உள்ளது. அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த பாஜக, அதிமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. ஆனால், திமுகவுடம் கூட்டணியே இல்லாமல், திமுக நிகழ்ச்சிகளில் மத்திய பாஜக பங்கேற்று வருகிறது” என்றார்.