

திட்டக்குடி: தீப்பிடித்து எரிந்த கார்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த ராஜா, சசிகுமார், கேசவன், அருண்குமார் ஆகிய 4 பேரும் கள்ளக்குறிச்சி பகுதியில் வங்கியில் பணியாற்றி வருகின்றனர். இன்று காலை திட்டக்குடியில் இருந்து காரில் செல்லும் போது தேசிய நெடுஞ்சாலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்து தீ பிடித்து கொண்டதில் இதில் 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.