ஒரங்கூர்: ரமலான் நோன்பில் எம்எல்ஏ பங்கேற்பு

84பார்த்தது
புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு திட்டக்குடி சட்டமன்ற தொகுதி ஒரங்கூர் ஊராட்சியில் ரமலான் நோன்பினை கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்ஆர் இராதாகிருஷ்ணன் எம்எல்ஏ திறந்து வைத்தார். “சிறுபான்மை மக்கள் மனதில் பெரும்பான்மை இடத்தைப் பிடித்துள்ள நம் இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கம் என்றும் அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும்” என எம்எல்ஏ உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மங்களூர் வட்டார தலைவர்கள் கொரக்கவாடி சக்திவேல், L. K. பரமசிவம், நல்லூர் வட்டார தலைவர் செம்பேரி சக்திவேல் ராஜன், கம்மாபுரம் வட்டார தலைவர் சாந்தகுமார், குறிஞ்சிப்பாடி வட்டார தலைவர் ஜெயராஜ் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி