மகாராஷ்டிரா மாநிலத்தில் சாலை ஓரம் உள்ள கடையில் பானி பூரி சாப்பிட்ட 31 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு, பானி பூரி சாப்பிட்ட உடன் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் நாந்தேட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் வெவ்வேறு வார்டுகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் ஃபுட் பாய்சன் ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. மாணவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.