கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் பெண்ணாடம் அடுத்த தாழநல்லூர் கிராமத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு நலத்துறை அமைச்சர் சி. வெ. கணேசன் நியாயவிலலக்கடையைதிறந்துவைத்தார். செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கணேசன் 100நாள் வேலை திட்டத்தின் தினசரி ஊதியத்தினை ஒன்றிய அரசு நிலுவை தொகையான 4034கோடி ரூபாய் வழங்கிட வேண்டும் என கூறினார்இதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடியினர் மக்கள் பயன்பெறுவார்கள் இதனை வைத்துக்கொண்டு ஒன்றிய பாஜக அரசு அரசியல் செய்வது மட்டுமல்லாமல் தமிழக மக்களை வஞ்சிக்கிறார்கள் என கூறினார். இதில் ஒ. செ பட்டூர் அமிர்தலிங்கம், நகர செயலாளர் விபிபி பரமகுரு, அயலக அணி மாவட்ட அமைப்பாளர் சேதுராமன், மாவட்ட பிரதிநிதி விக்கி, அரசு அதிகாரிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்