கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆவட்டி ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மூலம் ஏற்படுத்தப்பட்டது. ஊர்வலத்தினை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் வட்டார ஒருங்கிணைப்பாளர் குணசேகரன், ஊராட்சி செயலர் ஜாபர் உசேன், பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.