தமிழ்நாடு அரசின் 2025 -2026 ஆம் ஆண்டிற்கான தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் மானியக் கோரிக்கை நடைபெறவுள்ளதையொட்டி இன்று (9. 4. 2025) சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ மற்றும் அதிகாரிகள் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.