
கடலூர்: அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டம் வெள்ளியங்கால் ஓடையில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், நேரில் சென்று அஞ்சலி செலுத்தி பெற்றோர்களுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் ஆறுதல் கூறினார்.