பாஜக குறித்து திமுக அமைப்புச் செயலாளார் ஆர்.எஸ். பாரது கூறுகையில், “மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பது தமிழ்நாட்டு மக்களின் உணர்விலும் உயிரிலும் கலந்த முழக்கம். 'திமுக பிரிவினைவாதம் பேசுகிறது' என்ற வாதம் 50 ஆண்டுகால பழைய முனை மழுங்கியது. அண்ணா திமுகவில் இருந்தவருக்கு அண்ணாவின் அடிப்படை சித்தாந்தம் கூட தெரியவில்லை. மாநில உரிமை பறிப்புக்கு ஆதரவாக இருந்தால் 2026 தேர்தலில் பாஜக டெபாசிட் கூட வாங்காது” என்றார்.