அதிமுக - பாஜக கூட்டணி சிறப்பானது என்றும் நிச்சயம் தேர்தலில் வெல்லும் எனவும் மதுரை ஆதீனம் கூறினார். "இப்போது உள்ள ஆட்சியை பற்றி நான் குறை சொல்ல மாட்டேன், பள்ளி மாணவர்கள் போதைப் பழக்கத்துக்கு ஆளாவது வருத்தமாக உள்ளது. இதற்கு அரசாங்கத்தை மட்டும் குறை கூறக்கூடாது. பெற்றோர்களும் ஒரு காரணம் தான். அவர்கள் பிள்ளைகளை சரியாக வளர்க்க வேண்டும். சினிமாவும் இதற்கு காரணம், அதை தடை செய்ய வேண்டும்” என்றார்.