தமிழக சட்டப்பேரவையில் பேசிய செல்லூர் ராஜு, “மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாத வண்ணம், மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை 3 நாட்கள் மூட வேண்டும்” என கோரிக்கை வைத்தார். அதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, “கடந்த ஆட்சியில் கூறி நடக்காததை இந்த ஆட்சியில் சொல்லி கேட்கிறார். அவர் கேட்டுக்கொண்டது போல சித்திரை திருவிழா ஜே..ஜே.. என்று நடைபெறும்” என்றார்.