பள்ளி குழந்தைகளை விஷம் வைத்து கொல்ல முயற்சி?.. அசம்பாவிதம் தவிர்ப்பு

54பார்த்தது
பள்ளி குழந்தைகளை விஷம் வைத்து கொல்ல முயற்சி?.. அசம்பாவிதம் தவிர்ப்பு
தெலங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டம் தரம்புரி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் குழந்தைகளுக்கு விஷம் கொடுக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் குடிநீர் தொட்டியில் விஷம் கலக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பள்ளி வளாகத்தில் பூச்சிக்கொல்லி மருந்தின் வாசனையும், பூச்சிக்கொல்லி டப்பாவும் கிடந்துள்ளது. உடனடியாக மாணவர்களை தண்ணீர் குடிக்க விடாமல், உணவு உண்ண விடாமல் பள்ளி தலைமை ஆசிரியர் தடுத்து நிறுத்தினார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி