அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக திருப்பூரில் 2 கட்சி நிர்வாகிகளின் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், முன்னாள் MLA குணசேகரன், பாஜக திருப்பூர் மாவட்ட தலைவர் சீனிவாசன் கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "இந்த கூட்டணியை பிடிக்காதவர்களால் திட்டமிட்டு வீடியோ பரப்பப்பட்டுள்ளது. அனைத்து தொண்டர்களின் ஒரே நோக்கம் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பது தான். இந்த கூட்டணி தமிழகத்தில் 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்" என்று கூறியுள்ளனர்.