கோவை: மலை ரயில் போக்குவரத்து ஏழாம் தேதி வரை ரத்து
கோயம்புத்தூர் |

கோவை: மலை ரயில் போக்குவரத்து ஏழாம் தேதி வரை ரத்து

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள், நீலகிரி மாவட்டம் ஆகிய பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.  இதன் காரணமாக மலை ரயில் பாதை அமைந்துள்ள கல்லாறு, ஹில்கிரோவ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. கடந்த நவம்பர் 3ஆம் தேதி மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு, தண்டவாளங்கள் மீது பாறைகள் உருண்டு விழுந்ததால் தண்டவாளங்கள் சேதமடைந்தன. இதனைத் தொடர்ந்து, நவம்பர் 3 முதல் 5 வரை மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன.  தற்போது மீண்டும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டுப்பாளையம்-உதகை இடையிலான மலை ரயில் போக்குவரத்து வருகின்ற நவம்பர் 7ஆம் தேதி வரை பாதுகாப்பு கருதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

வீடியோஸ்


தமிழ் நாடு