சிறுமுகை: மகனின் கடனுக்காக தந்தையை தாக்கிய காவலர்!

82பார்த்தது
மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த வேல்முருகன் (47) என்பவரின் மகன் கார்த்திக். இவர் அடிக்கடி தனது தந்தையிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்ததாகவும், வீட்டிற்கு வருவதில்லை என்றும் தெரிகிறது. மேலும், கார்த்திக் தனக்கு தெரிந்தவர்களிடம் கடன் வாங்கியிருந்ததாகவும் அறியப்படுகிறது. கார்த்திக் வாங்கிய கடனை திருப்பி தராததால், கடன் கொடுத்தவர்கள் அடிக்கடி வீட்டிற்கு வந்து கேட்டனர். அப்போது வேல்முருகன், தனது மகன் வீட்டிற்கு வருவதில்லை என்றும், கடன் வாங்கியது குறித்து தனக்கு ஒன்றும் தெரியாது என்றும் கூறி அனுப்பி வைத்தார். இதனால் ஏமாற்றமடைந்த கடன் கொடுத்தவர்கள் சிறுமுகை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, இரண்டாம் நிலை காவலர் ரஞ்சித், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த ஒருவர் ஆகிய இருவர் விசாரணைக்காக கார்த்திக்கின் வீட்டிற்குச் சென்றனர். கார்த்திக் வீட்டில் இல்லாததால், அவரது தந்தை வேல்முருகனை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்தனர். அவர் வர மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த காவலர் ரஞ்சித், வேல்முருகனை அடித்தும், பூட்ஸ் காலால் எட்டி உதைத்தும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவலர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து காவல் கண்காணிப்பாளர் இன்று உத்தரவிட்டுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி