’கங்குவா’ படத்திற்கு திட்டமிட்டு அவதூறு: நடிகை ஜோதிகா கொந்தளிப்பு
'கங்குவா' திரைப்படத்திற்கு திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுவதாக நடிகை ஜோதிகா கொந்தளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், “மற்ற பெரிய பட்ஜெட் படங்களுக்கு வராத விமர்சனங்கள் கங்குவா படத்திற்கு மட்டும் வருவது ஏன்? படத்தில் 30 நிமிடங்கள் மட்டுமே நன்றாக வரவில்லை. சத்தம் இரைச்சலாக உள்ளது என்பதை ஒத்துக்கொள்கிறேன், சினிமாவை உயர்த்த முன் வராமல் எதிர்மறை விமர்சனங்களை வைக்கிறார்கள்” என்றார்.