தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் திருநங்கை ஒருவரிடம் வீடு புகுந்து காவலராக பணியாற்றும் வினோத் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர் தவறு செய்தது உறுதியானது. இதனை தொடர்ந்து காவலர் வினோத் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரை பணிநீக்கம் செய்வதாக மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.