கோவை துடியலூரைச் சேர்ந்த சத்தியமூர்த்தி (42) என்பவர் தனது மனைவி ஆர்த்தி (31) , 14 வயது மகளை மீட்டுத்தர கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்துள்ளார். தனது பள்ளிக்கால நண்பர் ஹசன்பாதுஷா என்பவர் பணத்துக்காக தனது குடும்பத்தை பிரித்து, மதமாற்றம் செய்ய முயல்வதாக குற்றம்சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய சத்தியமூர்த்தி கூறுகையில், தன்னுடைய நெருங்கிய சொந்தக்கார பெண்ணான ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டு, திருமணத்துக்கு பிறகு மனைவியை உயர்கல்வி படிக்க வைத்து, ஐ. டி வேலைக்குச் சென்று வருகிறார். இந்நிலையில், பள்ளிப்பருவ நண்பர் ஹசன்பாதுஷா என்பவரின் பழக்கம் அண்மையில் ஏற்பட்டது. இந்த நட்பானது குடும்பத்தில் பிரிவை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஆரம்பத்தில் தனக்கு தெரியவில்லை. என் மனைவியிடம் என்னை அவதூறாக சித்தரித்து மனைவியிடம் இருக்கக்கூடிய பணம் மற்றும் நகைகளை பெற்றுக் கொள்ள நாடகமாடியது எனக்கு தெரியவந்தது. இது தொடர்பாக பேசியபோது, மனைவியும் முறையாக பதில் சொல்லவில்லை. இந்நிலையில், என்னுடைய மனைவியை மதம் மாற்றி எனக்கு எதிராக செயல்பட வைத்ததாக தெரிந்து கொண்டேன். பின்னர் இது தொடர்பாக துடியலூர் ஜமாத்திலும் துடியலூர் காவல் நிலையத்திலும் புகார் மனு அளித்தேன். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. தன்னுடைய மனைவியையும் குழந்தையையும் தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கண்ணீருடன் பேட்டி அளித்தார்.