தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருந்த நடிகை கஸ்தூரியை போலீசார் நேற்று (நவ. 16) கைது செய்தனர். அவரை பிடிக்க போலீசார் சென்ற போது கதவை திறக்காமல் இருந்திருக்கிறார், கதவை உடைத்து விடுவோம் என போலீசார் கூறிய பின்பே கதவை திறந்திருக்கிறார். வெளியில் எங்கும் செல்லாமல் இருந்த கஸ்தூரி தனது மொபைலை ஆஃப் செய்துவிட்டு தயாரிப்பாளரின் போனை பயன்படுத்தியிருக்கிறார்.